FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!

தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டது பற்றி...

36 வினாடிகள் முன்பு
தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம் - PTI
பகிர்:

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாதி வழியிலேயே துணை ராணுவப் படையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் தன்னிச்சையாக செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நோக்கி, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பதாகைகளுடன் இன்று பேரணியாகச் சென்றனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில், நாடாளுமன்ற சாலையில் நிதி ஆயோக் மற்றும் ஆகாஷ்வாணி பவனுக்கு இடையேயான சாலையில் உள்ள நிதி ஆயோக் அலுவலகத்தின் முன்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்ற சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எம்பிக்கள் முழக்கம் எழுப்பி வருகின்றன.

இந்த பேரணியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் போராட்டத்தை தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வெளியே துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

summary

MPs heading to the Election Commission stopped! Staged a sit-in protest on the road!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments