பாஜகவினர் மட்டுமே நாட்டின் குடிமக்களாக தேர்தல் ஆணையம் கருதுகிறது! அகிலேஷ் யாதவ்
தேர்தல் ஆணையத்தை சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்திருப்பது பற்றி...
பாஜக உறுப்பினர்கள் மட்டுமே இந்திய குடிமக்களாக தேர்தல் ஆணையம் கருதுகிறது என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) முறைகேடுகளுக்காக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தி வரும் தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இன்று பேரணி செல்கின்றனர்.
Advertisement
Advertisement
இந்த பேரணியில் கலந்துகொள்வதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
”தேர்தல் ஆணையம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த புகார்கள், ஆட்சேபனைகள் எழுவது ஒன்றும் புதிதல்ல. பாஜக உறுப்பினர்கள் மட்டுமே இந்தியக் குடிமக்கள் என்பது போலவும், அவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உள்ளது என்பது போலவும் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகத் தோன்றுகிறது.
பாஜக ஒரு 'தேர்தல் இயந்திரம்' போலச் செயல்படுவதாக மக்கள் கூறுகின்றனர். அவர்கள் தேர்தல்களில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், அபரிமிதமான நிதி வளங்களையும் திரட்டுகின்றனர்.
மேற்கு வங்கத்தின் வன்முறை மூலம் வாக்குச்சாவடிகள் கைப்பற்றினர். அங்கு மட்டுமல்ல, முன்னதாக உத்தரப் பிரதேசத்திலும் அவர்கள் இதையே செய்தனர். குண்டார்கி மற்றும் மீராபூர் தேர்தல்களிலும், அயோத்தி மற்றும் அம்பேத்கர் நகர் இடைத்தேர்தல்களிலும் அவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டனர்.
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தேர்தல் ஆணையம் அந்தக்கட்சிக்காகவே செயல்படத் தொடங்கியுள்ளது. பாஜக முன்வைக்கும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சி அல்ல. மாறாக, ஒரே ஒரு முறை மட்டும் முறைகேடு செய்துவிட்டு, அதன்பிறகு 5 ஆண்டுகள் மக்களுக்கு பதிலளிக்காமல் ஆட்சி செய்வதற்கான ஒரு தந்திரம். நாட்டு மக்கள் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
The Election Commission considers only BJP members as Indian citizens! – Akhilesh Yadav
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.