FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உத்தரப் பிரதேச தேர்தல்: 181 தொகுதிகளை கேட்கும் காங்கிரஸ்!

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி 181 தொகுதிகளைக் கேட்பதாக சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தகவல்...

அகிலேஷ் யாதவ் - ராகுல் காந்தி - கோப்புப் படம் | PTI
பகிர்:

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி 181 தொகுதிகளைக் கேட்பதாக சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தகவல் தெரிவித்துள்ளார்.

தில்லியில், பிரபல ஆங்கில நாளிதழ் நடத்திய மாநாட்டில், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டு பேசினார். அவரிடம் காங்கிரஸ் கட்சியுடனான உறவு, இந்தியா கூட்டணி குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.

Advertisement

Advertisement

அப்போது காங்கிரஸ் 100 தொகுதிக்கும் மேல் போட்டியிடப் போவதாக அவரிடம் கேட்கப்பட்டது. இதுகுறித்து அவர் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி உறவு மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது.

நீங்கள் சொல்வதைவிட இரட்டிப்பாக கேட்டிருக்கிறார்கள். மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 181 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜவாதி கூட்டணி மொத்தமுள்ள 80-ல் 43 தொகுதிகளில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்று 43.52 சதவிகித வாக்குகளைப் பெற்றது.

2019-ஆம் ஆண்டில் பாஜகவின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 62 ஆக இருந்த நிலையில், 2024-ல் 33 ஆகக் குறைந்தது. இதனால், 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை பாஜகவால் பெற முடியாமல் போனது.

காங்கிரஸ் போட்டியிட்ட 17 இடங்களில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்று 9.46 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 2027 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், சமாஜவாதி கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் இடையே முக்கியப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 7 இடங்களை வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, 2022 உத்தரப் பிரதேசத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு இரண்டு இடங்களை மட்டுமே வென்றது. 2022-ஆம் ஆண்டில் 399 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 2.33 சதவிகித (21.51 லட்சம் வாக்குகள்) வாக்குகளை மட்டுமே பெற்றது. அதே தேர்தலில் 399 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் 387 இடங்களில் தங்களது வைப்புத்தொகையை இழந்தனர்.

summary

Samajwadi Party (SP) chief Akhilesh Yadav indicated on Saturday (November 14, 2026) that the Congress has expressed its wish to contest 181 seats in the 2027 Uttar Pradesh Assembly polls, while asserting that the INDIA bloc would remain united to defeat the ruling BJP in the State.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.