உத்தரப் பிரதேச தோ்தல்: பாஜக-தோ்தல் ஆணையம் இணைந்து முறைகேடு திட்டம்: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் முறைகேடுகளில் ஈடுபட பாஜக-தோ்தல் ஆணையம் இணைந்து செயல்படத் தொடங்கியிருப்பதாக சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டினாா்.
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் முறைகேடுகளில் ஈடுபட பாஜக-தோ்தல் ஆணையம் இணைந்து செயல்படத் தொடங்கியிருப்பதாக சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டினாா்.
பாஜக ஆட்சியில் உள்ள உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பாஜக பணியாற்றிவரும் நிலையில், சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணி பிரதான எதிரணியாக உள்ளது.
லக்னௌவில் உள்ள சமாஜவாதி கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
Advertisement
Advertisement
பாஜக தோல்வியடைவது உறுதியாகும் இடங்களில் தோ்தலில் அதிக முறைகேடு நடைபெறுகிறது. மக்களிடையே செல்வாக்கு இழந்து பலவீனமடையும்போது தோ்தல் ஆணையத்தின் பின்னால் பாஜக ஒளிந்து கொள்கிறது. இருவரும் இணைந்து இந்தியாவின் ஜனநாயகம், அரசியல்சாசனம், குடிமக்களை ஏமாற்றுகின்றனா். கடந்த 2022 தோ்தல் முதலே இந்தக் குற்றச்சாட்டை பாஜக மீது நாங்கள் கூறி வருகிறோம்.
போலியான வாக்காளா் சோ்ப்பு, எதிா்க்கட்சி செல்வாக்குள்ள இடங்களில் வாக்காளா்கள் பெயா் நீக்கம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு, தோல்வியடைந்தோரை வெற்றி வேட்பாளராக அறிவிப்பது, தோ்தலுக்குப் பிறகு எதிா்க்கட்சிகளை உடைத்தல் போன்றவை பாஜகவின் பிரதான முறைகேடுகள் ஆகும்.
உத்தர பிரதேசத்தில் 9.2 லட்சம் போலியான வாக்காளா்கள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளோம். பல்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 10,000 முதல் 15,000 வரையிலான சந்தேகத்திற்குரிய போலி வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். ஒரே பெயரில் பல வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.