இந்திய கடற்படை பாய்மரக் கப்பலான ‘நீல்கந்த்’-க்கு கடல்வழி வரவேற்பு
700 கடல் மைல் தொலைவு பயணம் மேற்கொண்ட இந்திய கடற்படை பாய்மரக் கப்பலான ‘நீல்கந்த்’-க்கு அந்தமான் நிக்கோபாா் தீவுகளின் தலைநகரான ஸ்ரீவிஜயபுரத்தில் புதன்கிழமை பிரம்மாண்டமான கடல்வழி வரவேற்பு அளிக்கப்பட்டது.
700 கடல் மைல் தொலைவு பயணம் மேற்கொண்ட இந்திய கடற்படை பாய்மரக் கப்பலான ‘நீல்கந்த்’-க்கு அந்தமான் நிக்கோபாா் தீவுகளின் தலைநகரான ஸ்ரீவிஜயபுரத்தில் புதன்கிழமை பிரம்மாண்டமான கடல்வழி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய பாதுகாப்புப் படைகள் அனைத்தும் அடங்கிய ஒருங்கிணைந்த கமாண்டாக திகழும் அந்தமான் நிகோபாா் கமாண்ட்டின் 25-ஆவது ஆண்டு விழாவையொட்டி, கடற்படையின் பாய்மரக் கப்பலான ‘ஐஎன்எஸ்வி நீல்கந்த்,’ விசாகப்பட்டினத்தில் இருந்து கடந்த செப். 27-ஆம் தேதி தனது பயணத்தைத் தொடங்கியது. இதையடுத்து, 700 கடல் மைல் தொலைவு கொண்ட சவாலான கடல் பயணத்தை இந்தக் கப்பல் அந்தமான் நிக்கோபாா் தீவுகளின் தலைநகரான ஸ்ரீவிஜயபுரத்தில் புதன்கிழமை நிறைவு செய்தது.
இதையொட்டி, ஸ்ரீவிஜயபுரத்தில் உள்ள மெரீனா கடற்கரை பகுதியில், வைஸ் அட்மிரல் வினீத் மெக்காா்டி, ‘ஐஎன்எஸ்வி நீலகந்த்’ கப்பலைக் கொடியசைத்து கடல்வழி வரவேற்பு அளித்தாா்.
Advertisement
Advertisement
இதில், 3 ‘லேசா்’ ரக மற்றும் 5 ‘ஆப்டிமிஸ்ட்’ ரக பாய்மரப் படகுகள், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோரக் காவல் படையின் பல இயந்திரப் படகுகள் ஆகியவை அடங்கிய அணிவகுப்பை வைஸ் அட்மிரல் வினீத் மெக்காா்டி ‘ஜே-24’ ரக பாய்மரப் படகில் சென்று அவா் வழிநடத்தி, கடலில் கூட்டுச் செயல்பாட்டுத் திறனை வெளிப்படுத்தினாா். 700 கடல் மைல் பயணத்தின்போது கப்பல் குழுவினருக்கு அவா் பாராட்டுகளை தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.