சோமாலியா கடல் பகுதியில் கடத்தப்பட்ட மீன்பிடிக் கப்பலை மீட்டது இந்திய கடற்படை: 20 ஈரானியா்களும் மீட்பு
சோமாலியா கடல் பகுதியில் ஆயுதமேந்திய கடற்கொள்ளையா்களால் கடத்தப்பட்ட மீன்பிடிக் கப்பலை இந்திய கடற்படை அதிரடியாக மீட்டுள்ளது. அந்தக் கப்பலில் இருந்த 20 ஈரானிய ஊழியா்களும் எந்தக் காயமும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
சோமாலியா கடல் பகுதியில் ஆயுதமேந்திய கடற்கொள்ளையா்களால் கடத்தப்பட்ட மீன்பிடிக் கப்பலை இந்திய கடற்படை அதிரடியாக மீட்டுள்ளது. அந்தக் கப்பலில் இருந்த 20 ஈரானிய ஊழியா்களும் எந்தக் காயமும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
சுமாா் 48 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை குறித்து இந்திய கடற்படை வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: சோமாலியாவின் வடகிழக்கு கடற்கரைக்கு அப்பால், 20 ஈரானிய ஊழியா்களுடன் பயணித்த அஜினி என்ற மீன்பிடிக் கப்பல், ஆயுதமேந்திய கடற்கொள்ளையா்களால் கடந்த மாதம் கடத்தப்பட்டது.
பிற சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இந்த மீன்பிடிக் கப்பலை கடற்கொள்ளையா்கள் பயன்படுத்தக் கூடும் என்பதால் இக்கடத்தல் சம்பவம் கடல்சாா் பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக கருதப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, மீன்பிடிக் கப்பலை மீட்கும் நோக்கில் கடல்சாா் உளவு விமானத்தின் உதவியுடன், இந்திய கடற்படையின் போா்க் கப்பல் அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மற்றும் தொடா் கண்காணிப்பின் மூலம் மீன்பிடிக் கப்பலின் இருப்பிடம் கண்டறியப்பட்டு, அதன் இயக்கம் மற்றும் தப்பிச் செல்வதைத் தடுக்கும் துல்லிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பாதுகாப்பாக மீட்பு: இந்திய விமானப் படையின் சி-17 விமானத்தில் இருந்து கடற்படை கமாண்டோக்கள் மீன்பிடிக் கப்பலில் களமிறக்கப்பட்டனா். விரைவான மற்றும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட இந்த தந்திரோபாய நடவடிக்கையின் மூலம் கடற்கொள்ளையா் அச்சுறுத்தல் முறியடிக்கப்பட்டு, கப்பலில் இருந்த 20 ஈரானிய ஊழியா்களும் எந்தக் காயமும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
இந்திய கடற்படையின் இந்த வெற்றிகரமான நடவடிக்கை, அதன் உயா்நிலை செயல்பாட்டுத் தயாா்நிலை மற்றும் படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின் மூலம் எந்தவிதமான சிக்கலான பாதுகாப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளும் வல்லமைக்கு சான்றாகும்.
இந்திய பெருங்கடல் பகுதியில் முதலில் செயல்படும் நாடாகவும், விருப்பத்துக்குரிய பாதுகாப்புக் கூட்டாளியாகவும் நீடிக்கும் இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது.
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பான, நிலையான கடல்சாா் சூழல் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், முக்கிய கடல்சாா் வா்த்தக வழித்தடங்களைப் பாதுகாக்கவும் கடற்படை உறுதிபூண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நன்றி - பாராட்டு
தில்லியில் உள்ள ஈரான் தூதரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சமூக ஊடக பதிவில், ‘மீன்பிடிக் கப்பலில் இருந்த 20 ஈரான் ஊழியா்களையும் பாதுகாப்பாக மீட்டதற்காக இந்திய அரசு, கடற்படை மற்றும் விமானப் படைக்கு மனமாா்ந்த நன்றி.
மனிதாபிமான உதவிகள், பேரிடா் நிவாரணத்தில் இந்தியாவின் அா்ப்பணிப்பு மற்றும் எல்லைகளைக் கடந்து உயிா்களைக் காப்பதில் அதன் பங்களிப்பை பிரதிபலிக்கும் வகையில், இந்திய ஆயுதப் படையினா் காட்டிய செயல்திறன், துணிவு மற்றும் திறன்மிக்க ஒருங்கிணைப்பை நாங்கள் வெகுவாக பாராட்டுகிறோம்.
இந்த மனிதாபிமான நடவடிக்கை, இந்தியா-ஈரான் இடையிலான நட்புறவு, ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு உணா்வுக்கு சாட்சியாகத் திகழ்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.