ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!
ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க முயன்ற கேரள முதல்வரை தில்லி காவல் துறை தடுத்து நிறுத்தியதாகக் குற்றச்சாட்டு...
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், தில்லி காவல் நிலையத்தை கேரள முதல்வர் வி.டி. சதீசன் முற்றுகையிட்டுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமெனவும், அவர் மீது குற்றவிசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லியில் இன்று (அக். 7) போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், ராகுல் காந்தி தலைமையிலான இந்தப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற கேரள முதல்வர் வி.டி. சதீசனை தில்லி காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகுல் காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் பராகம்பா காவல் நிலையத்தை கேரள முதல்வர் சதீசன், காங்கிரஸ் எம்பி கிரண் குமார் சாமலா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.
இதுபற்றி, கேரள முதல்வர் வி.டி. சதீசன் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,
“அமைதியான போராட்டம் ஒன்றை வழிநடத்திச் சென்ற ராகுல் காந்தியுடன் இணைவதற்காக நான் ஜந்தர் மந்தர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். தில்லி காவல்துறை எங்களைத் தடுத்து நிறுத்தியது. தற்போது நான் பராகம்பா காவல் நிலையத்தில் இருக்கிறேன்.
இந்தச் சம்பவம், மக்கள் ஒன்றுகூடுவதற்கும், தங்களின் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துவதற்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் உரிமையின் மீதான தாக்குதல்.
போராட்டத்தில் பங்கேற்றதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை கைது செய்ய முடியாது. அரசியல் சார்ந்த போராட்டங்களைக் குற்றமாகக் கொண்டிருந்த பிரிட்டிஷ் காலத்து காவல்துறையின் ஆதிக்க ஆட்சியை இது நினைவூட்டுகிறது.
ஜனநாயகம் என்பது காவல்துறையினர் வழங்கும் சலுகை அல்ல!” எனக் கூறியுள்ளார்.
Kerala CM V.D. Satheesan has laid siege to a Delhi police station following the arrest of Rahul Gandhi and others.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.