FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஞானேஷ் குமாருக்கு எதிரான கடிதத்துக்கு குடியரசுத் தலைவர் பதிலளிப்பு! - சிபிஎம் எம்பி தகவல்!

ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தான் எழுதிய கடிதத்துக்கு குடியரசுத் தலைவர் பதிலளித்ததாக ஜான் பிரிட்டாஸ் பேச்சு...

சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் - கோப்புப் படம்
பகிர்:

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தான் எழுதிய கடிதத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதிலளித்ததாக, மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் (எஸ்ஐஆர்) சட்டவிரோதமான முறையில் 2 தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (அக். 7) தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிய கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தான் எழுதிய கடிதத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதிலளித்ததாகக் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

“அரசியலமைப்புக்கு எதிரான மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதற்காகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த மாதம் 23 ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு நான் முறையாக ஒரு கடிதம் எழுதினேன். ஆச்சரியப்படும் வகையில், எனக்குக் குடியரசுத் தலைவரிடம் இருந்து இன்று பதில் கிடைத்துள்ளது.

அதில், என் கடிதம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறையான “சட்டமன்ற விவகாரத் துறைக்கு” அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் அந்த உரிய நடவடிக்கை என்பது ஞானேஷ் குமாரைப் பதவியில் இருந்து நீக்குவதே ஆகும்.

இப்போது, நான் சம்பந்தப்பட்ட துறை மற்றும் குடியரசுத் தலைவரின் நடவடிக்கைக்காகக் காத்திருக்கிறேன். எங்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும், நாட்டு மக்கள் காத்திருக்கும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டதற்கு குடியரசுத் தலைவருக்கு நான் நன்றி கூறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

CPI(M) Rajya Sabha member John Brittas has stated that President Droupadi Murmu responded to the letter he wrote seeking action against Chief Election Commissioner Gyanesh Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments