ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! முர்முவைச் சந்திக்கும் இந்தியா கூட்டணித் தலைவர்கள்!
ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி குடியரசுத் தலைவர் முர்முவை இன்றிரவு இந்தியா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்றிரவு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்திப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் (எஸ் ஐ ஆர்) தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முறைக்கேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி கடந்த 3 நாள்களாக தில்லியில் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், வாக்குத் திருட்டு மற்றும் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி இன்று (அக். 9) இரவு 8 மணிக்கு இந்தியா கூட்டணித் தலைவர்கள் குடியரசுத் தலைவர் முர்முவை நேரில் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, மார்க்சிய கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் எம்.ஏ. பேபி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவர் முர்முவைச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, இந்த விவகாரம் குறித்து கடந்த அக்.2 ஆம் தேதி குடியரசுத் தலைவர் முர்முவைச் சந்திக்க இந்தியா கூட்டணித் தலைவர்கள் நேரம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
leaders of the INDIA alliance parties are set to meet President Droupadi Murmu tonight to demand the resignation of CEC Gyanesh Kumar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.