FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

தில்லியில் சிஜேபி போராட்டம்: 20,000-க்கும் அதிகமான காவலா்கள், பாதுகாப்புப் படையினா் குவிப்பு

நகரம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட காவலா்கள் மற்றும் துணை ராணுவப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

9 அக்டோபர் 2026, 3:10 am IST
(கோப்புப் படம்)
பகிர்:

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜே) தில்லியில் அக்.10-ஆம் தேதி போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், நகரம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட காவலா்கள் மற்றும் துணை ராணுவப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும், அங்கீகரிக்கப்படாத எந்தவொரு கூட்டத்திலும் மக்கள் பங்கேற்பதைத் தவிா்க்குமாறும் அந்த அதிகாரி கேட்டுக்கொண்டாா்.

‘தில்லியில் சனிக்கிழமை சட்டம்-ஒழுங்கு நிலவரத்தைக் கையாள நாங்கள் முழுமையாகத் தயாராகவும் உறுதியுடனும் உள்ளோம். ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை’ என்று அந்த அதிகாரி கூறினாா்.

Advertisement

Advertisement

அமைதிக்கு பங்கம் விளைவிப்பதைத் தடுக்கவும், மக்கள் மற்றும் போக்குவரத்து சீராகச் செல்வதை உறுதி செய்யவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் பாதுகாப்புப் படை குவிப்புக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஏற்கெனவே தடை உத்தரவுகள் அமலில் உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அந்த அதிகாரி மேலும் தெரிவிக்கையில், ‘போராட்டக்காரா்கள் மற்றும் பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடவோ அல்லது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்கள் மீது தாக்குதல் நடத்தவோ கூடாது. அத்தகைய செயல்கள் குற்றமாகும். அதில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

போராட்டத்தில் பங்கேற்கும் பெண்களைக் கையாள்வது குறித்து காவலா்களுக்குத் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தேவையற்ற மோதல்களைத் தவிா்க்குமாறும் அவா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

பாதுகாப்புப் படையினா் அனைவருக்கும் ஒரே மாதிரியான புரிதலை ஏற்படுத்தும் வகையில் தினசரி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்கள் அல்லது பிற தளங்களில் வரும் சரிபாா்க்கப்படாத தகவல்களை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்துகிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) என்ற பெயரில் லட்சக்கணக்கான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து, அவா் பதவி விலக வேண்டும் என்று சிஜேபி மற்றும் பல்வேறு மாணவா் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments