முகப்பு

ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி தர்னா! சமாஜவாதி இன்று பங்கேற்பு!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான இந்தியா கூட்டணியின் போராட்டத்தில் சமாஜவாதி கட்சி பங்கேற்பு...

ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி தர்னா! சமாஜவாதி இன்று பங்கேற்பு!
அகிலேஷ் யாதவ் - ராகுல் காந்தி - கோப்புப் படம் | PTI
பகிர்:

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தும் போராட்டத்தில் சமாஜவாதி கட்சி பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் சட்டவிரோதமான முறையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியான செய்திகளால் நாடு முழுவதும் அவருக்கு எதிராகப் போராட்டம் வெடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, 3 ஆவது நாளாக இன்றும் (அக்.8) ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தில்லியின் ராஜ பாதையில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சி, சிவசேனை (உத்தவ் தாக்ரே அணி) மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஞானேஷ் குமாருக்கு எதிராகக் கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை எனத் தொடர்ந்து இருநாள்களாக நடைபெற்ற போராட்டங்களில் சமாஜவாதி கட்சி பங்கேற்காதது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது.

இத்துடன், நேற்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தில்லி காவல் துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

summary

Samajwadi Party has participated in the protest staged by INDIA bloc Members of Parliament against CEC Gyanesh Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.