சிஜேபி போராட்டம்: 57 மெட்ரோ நிலையங்களை மூடுமாறு தில்லி காவல்துறை கோரிக்கை
57 மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூடுமாறு தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு தில்லி காவல்துறை கடிதம் குறித்து...
புது தில்லி: தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி(சிஜேபி) நடத்தவிருக்கும் போராட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் 57 மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூடுமாறு தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு தில்லி காவல்துறை கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணி செய்ததன் மூலம் லட்சக்கணக்கான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்படுவதற்கு வழிவகுத்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (சிஜேபி) நாளை (அக்.10) ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தவுள்ளது. ஆனால், மக்களின் பாதுகாப்பு காரணங்களைக் காட்டு தில்லி காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது.
இந்த நிலையில், சிஜேபி போராட்டத்தைக் கருத்தில் கொண்டு 57 மெட்ரோ நிலையங்களை மூடுமாறு தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு தில்லி காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக தில்லி காவல்துறை இணை ஆணையர் (போக்குவரத்து பிரிவு) ரஜ்னீஷ் குப்தா வியாழக்கிழமை தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு எழுதிய கடிதத்தில், தில்லி ஜந்தர் மந்தரில் நாளை (அக்.10) கரப்பான்பூச்சி ஜனதா கட்சி(சிஜேபி) நடத்தவிருக்கும் போராட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் 57 மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் சனிக்கிழமை போராட்டம் முடிந்து சூழ்நிலை சீராகும் வரை நீடிக்கலாம் எனவும், சூழ்நிலையைப் பொறுத்து அக்.10 ஆம் தேதி மெட்ரோ ரயில் நிலையங்கள் வழியாகச் செல்லும் மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை குறைக்கவும் காவல்துறை பரிந்துரைத்துள்ளது.
போராட்டக்காரர்கள் தில்லியின் முக்கிய பகுதிகளுக்கு நுழைவதைத் தடுக்கும் வகையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்படவுள்ள 57 மெட்ரா நிலையங்களில் ஜன்பத், படேல் சௌக், சென்ட்ரல் செக்ரடேரியட், ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ், பாரகம்பா சாலை, உச்ச நீதிமன்றம், இந்திரபிரஸ்தா, காஷ்மீரி கேட், சாந்தினி சௌக், ஐஎன்ஏ, ஹவுஸ் காஸ், ஆசாத்பூர், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஷஹீன் பாக், வெல்கம் மற்றும் ரோஹினி வெஸ்ட் ஆகியவை அடங்கும்.
வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணி என்ற பெயரில் முறைகேடு செய்தல் மற்றும் வாக்காளராகப் பதிவு செய்வதற்கான முக்கிய ஆவணமான 'படிவம் 6'-ஐ மாற்றியமைப்பதில் தனது இரு சக அதிகாரிகளைத் தவிர்த்துச் செயல்பட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமார் எதிர்கொண்டுள்ளார்.
தில்லி முழுவதும் அசம்பாவிதங்களைத் தவிக்கும் வகையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தில்லி மெட்ரோ சேவையானது, தலைநகரை உத்தர பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் எல்லை நகரங்களுடன் இணைக்கிறது. மொத்தம் 271 நிலையங்களை கொண்ட ஒரு விரைவுப் போக்குவரத்து அமைப்பாக தில்லிவாசிகளின் போக்குவரத்து தேவையை டிஎம்ஆா்சி பூா்த்தி செய்து வருகிறது.
Delhi Police has requested the Delhi Metro Rail Corporation (DMRC) to shut 57 metro stations from 9 pm on Friday till Saturday,...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.