FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு!

தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் வழக்கம்போல் செயல்படுவது குறித்து...

11 அக்டோபர் 2026, 11:16 am IST
தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு. - கோப்புப் படம்
பகிர்:

தில்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் வழக்கம்போல் செயல்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டி அவர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நேற்று போராட்டம் நடத்த திட்டமிட்டது.

Advertisement

Advertisement

இந்தப் போராட்டம் எதிரொலியாக தில்லி முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, சில மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் குறிப்பிட்ட பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டது.

இந்த நிலையில், மூடப்பட்ட அனைத்து ரயில் நிலையங்களும் பயணிகளின் பயன்பாட்டுக்கு தற்போது திறக்கப்பட்டுள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

summary

The metro administration has announced that all metro stations in Delhi will function as usual.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments