சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!
சிஜேபி போராட்டம் எதிரொலியாக தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
தில்லியில் கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம் எதிரொலியாக இன்றிரவு 10 மணி முதல் 24 மணி நேரத்துக்கு இணைய சேவையை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தால் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, கடந்த அக். 2 ஆம் தேதி மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடைபெற்ற நிலையில், நாளை (அக், 10) தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெறும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
போராட்டம் எதிரொலியாக பாதுகாப்பு வளையத்திற்குள் தலைநகர் தில்லி கொண்டு வரப்பட்டு, தில்லியில் 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. 27 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புகாகக் குவிக்கப்பட்டுள்ளனர்.
போரட்டத்துக்கு தில்லி காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில் தில்லி காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் சிஜேபி போராட்டம் அறிவித்துள்ளதால், துணை ராணுவ போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தில்லிக்கு வரும் ரயில்கள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தில்லி முழுவதும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், ஜன்பத்-கர்த்தவ்யா பாதையின் நான்கு கிலோமீட்டர் சுற்றளவுக்கு இன்று இரவு 10 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு மொபைல் இணைய சேவை முடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் இணைய சேவை முடக்க தில்லி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
தலைநகர் தில்லியின் எல்லைக்குள் மேலும் லாரி, டிரக் போன்ற பிற வாகனங்கள் நுழையவும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தில்லி முழுவதும் ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டு மனித முகத்தை அடையாளம் காணும் நவீன ஏஐ கேமராக்கள் வழியாக தில்லி காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Mobile internet services will remain temporarily suspended within a four-kilometre radius of the Janpath-Kartavya Path crossing in the national capital from 10 pm on Friday to 10 pm on Saturday, following authorisation from the Union Home Secretary, according to an official order.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.