பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு சிறப்பு அந்நியச் செலவாணி வசதி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு சிறப்பு அந்நியச் செலவாணி வசதியை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறித்து...
புதுதில்லி: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு சிறப்பு அந்நியச் செலவாணி வசதியை இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்பிஐ) அறிவித்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் சந்தைப்படுத்தலுக்கான அன்றாட அமெரிக்க டாலர் தேவைகள் பூர்த்தி செய்வதற்கான ஒரு சிறப்பு வசதியை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்களின் அந்நியச் செலாவணித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ரிசர்வ் வங்கி நியமிக்கப்பட்ட வங்கிகள் மூலம் நேரடியாக அமெரிக்க டாலர்களை வங்கி விற்பனை செய்யும்.
Advertisement
Advertisement
இந்த வசதி நாளை(அக்.12) முதல் நடைமுறைக்கு வரும்; அடுத்த அறிவிப்பு வரும் வரை இது செயல்பாட்டில் இருக்கும். தற்போதும் நிலவும் உலகளாவிய சந்தை நிலவரங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வுகளை ஆய்வு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், அரசுக்குச் சொந்தமான இந்த மூன்று எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் அந்நியச் செலாவணித் தேவைகளை எளிதாக்குவதே இதன் நோக்கம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பொதுவாக எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான டாலர்களை வெளிச் சந்தையில் இருந்து வாங்கும்போது இந்திய ரூபாய் மதிப்பில் பெரும் வீழ்ச்சி ஏற்படும். ஆனால், தற்போது ரிசர்வ் வங்கி நேரடியாக டாலர்களை வழங்குவதால் சந்தை ஸ்திரத்தன்மையுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The Reserve Bank of India (RBI) has announced a special facility to meet the entire daily US dollar requirements of three public sector oil marketing companies
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.