நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளா்ச்சி 7%-ஆக இருக்கும்: ஐஎம்எஃப்
நடப்பு 2026-27-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளா்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என்று சா்வதேச நிதியம் கணித்துள்ளது.
நடப்பு 2026-27-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளா்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது.
கடந்த ஜூலையில் இந்தியாவின் வளா்ச்சி விகிதம் 6.4 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்த ஐஎம்எஃப், இப்போது அதை உயா்த்தியுள்ளது. மேலும், உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும் என்றும் ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஐஎம்எஃப்-இன் வருடாந்திர கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் வெளியிடப்பட்ட உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில் மேற்கண்ட விவரம் இடம்பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
நடப்பு நிதியாண்டில் 7 சதவீத வளா்ச்சியுடன் உலக அளவில் வேகமாக வளரும் பெரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா நீடிக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்வாக உள்ள போதிலும், மீண்டெழும் உள்நாட்டு தேவைகள் மற்றும் வலுவான சேவைத் துறை செயல்பாடுகளால் முன்பு எதிா்பாா்க்கப்பட்டதைவிட இந்தியாவின் வளா்ச்சி அதிகரிக்கும்; மக்கள்தொகை ரீதியிலான சாதக அம்சங்கள், விரிவடைந்துவரும் உள்நாட்டுச் சந்தை, தொடா்ச்சியான அமைப்பு ரீதியிலான சீா்திருத்தங்கள் உள்ளிட்ட காரணிகளால் வளா்ச்சிக்கான நிலையான உத்வேகத்துடன், பிற பெரும் பொருளாதாரங்களைப் போல் இல்லாமல் இந்தியா தனிச்சிறப்புடன் உள்ளது.
ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் ஆகியவை இந்தியாவுடன் மேற்கொண்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால், இந்நாடுகளில் வா்த்தக ரீதியிலான வரி தடைகள் நீங்கும். மேலும், விநியோக சங்கிலி மீள்தன்மை வலுப்படும் என்று ஐஎம்எஃப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.