FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம்! கரப்பான்பூச்சியுடன் கைகோர்க்கிறதா காங்கிரஸ்?

அபிஜீத் தீப்கே, அஷுதோஷ் ரன்கா, செளரவ் தாஸ் ஆகியோரை காவல் துறை கைது செய்ததற்கு ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளது குறித்து...

14 அக்டோபர் 2026, 7:45 pm IST
ராகுல் காந்தி - பிடிஐ
பகிர்:

அபிஜீத் தீப்கே, அஷுதோஷ் ரன்கா, செளரவ் தாஸ் ஆகியோரை காவல் துறை கைது செய்ததற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்தும் இடமாகத் இருந்த ஜந்தர் மந்தரில் இனிமேல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதியில்லை என மத்திய அரசு அறிவித்தது.

மேலும், கிழக்கு தில்லியில் மூன்று இடங்களை இதற்கு மாற்றாக அறிவித்துள்ளது. அவை தொலைவாகவும், எளிதில் சென்று சேர முடியாத போக்குவரத்து வசதிகளைக் கொண்டதாகவும் இருப்பதால், எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசின் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில், தில்லி ஜந்தர் மந்தருக்குள் தடையை மீறி சுவர் ஏறிக் குதித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிஜேபி நிர்வாகிகள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா, அஜிங்கியா ஆகியோர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 5 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கேவும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகிகளின் கைது நடவடிக்கைக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும் தனியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

தற்போது அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளதால், சிஜேபி உடன் காங்கிரஸ் கட்சி இணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

summary

Dipke, Ranka, Das jailed Rahul Gandhi condemns Is the Congress joining hands with cjp

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments