FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!

சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன் என மமதா பானர்ஜி தெரிவித்துள்ளது குறித்து...

14 அக்டோபர் 2026, 4:43 pm IST
அபிஜீத் தீப்கே - மமதா பானர்ஜி - கோப்புப் படம்
பகிர்:

கோடிக்கணக்கான இளைஞர்களை நோக்கி, சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன் என மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி இன்று (அக். 14) தெரிவித்துள்ளார்.

மேலும், சிஜேபி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்தும் இடமாகத் இருந்த ஜந்தர் மந்தரில் இனிமேல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதியில்லை எனவும் அதற்கு மாற்று இடங்களையும் தில்லி காவல்துறை அண்மையில் அறிவித்தது.

Advertisement

Advertisement

இந்தத் தடையை மீறி ஜந்தர் மந்தருக்குள் நுழைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா, அஜிங்கியா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 5 நாள்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மமதா பானர்ஜி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

ஜனநாயக உரிமைக்காக நாங்களும் எங்களுக்கு முந்தைய தலைமுறையினரும் போராடியுள்ளோம். நாம் அதைத் தொடர்ந்து செய்தாக வேண்டும். அசுதோஷ் ரன்கா, சௌரவ் தாஸ் கைது செய்யப்பட்டதற்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது. இது ஒரு முழுத் தலைமுறையையும் அச்சுறுத்தி அமைதிபடுத்தும் முயற்சி. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. நமது அரசியலமைப்பு உரிமைகளை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது.

இந்த ஜனநாயக படுகொலை நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதே நேரத்தில், மேற்கு வங்கத்தில் உள்ள 14,000 மக்கள் காவல்துறையினரின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். ‘மக்களின், மக்களால், மக்களுக்காக’ என்பதை மறந்த அரசு, அதன் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது.

கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு நான் சொல்கிறேன். உங்கள் சகோதரி உங்களுடன், இன்றும் என்றும் எப்போதும் இருக்கிறேன். நாம் ஒன்றுபட்டு நின்று நம் நம் நாட்டைப் பாதுகாப்போம் என்று மமதா குறிப்பிட்டுள்ளார்.

summary

Addressing millions of young people, West Bengal Chief Minister Mamata Banerjee stated today (Oct. 14) that she will always be with them as a sister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments