தொகுதி மறுவரையறை: மு.க. ஸ்டாலினை சந்திக்கும் மமதா பானர்ஜி!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசிப்பதற்காக முன்னாள் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சென்னை வரவுள்ளது குறித்து...

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசிப்பதற்காக முன்னாள் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) சென்னை வருகிறார்.
தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்கும் என்று மு. க. ஸ்டாலின் நேற்று (நவ. 28) அறிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்த்துப் பேசவுள்ளனர்.
இந்தக் குழுவில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியும் இடம்பெற்றுள்ளார். இதற்காக தனி விமானம் மூலம் சென்னை வருவதற்காக தில்லியில் உள்ள அபிஷேக் பானர்ஜி இல்லத்திலிருந்து மமதா பானர்ஜி புறப்பட்டார்.
Advertisement
Advertisement
இந்த சந்திப்பின்போது, மசோதாவுக்கு ஆதரவளிக்கும் திமுகவின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மு.க. ஸ்டாலினிடம் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை மசோதா மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் மும்பையில் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.