மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!
மமதா பானர்ஜி தில்லி செல்வதைத் தடுப்பதற்காக விமானம் தாமதம் செய்யப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு...
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி தில்லி செல்வதைத் தடுப்பதற்காகவே விமானம் தொடர்ந்து தாமதம் செய்யப்படுவதாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைக்கேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து 3 ஆவது நாளாக இன்று (அக்.8) போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி இந்தியா கூட்டணியின் போராட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை தில்லிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
ஆனால், கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து அவர் செல்லவிருந்த விமானம் தொடர்ந்து தாமதமானதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மமதா தில்லி செல்வதைத் தடுக்கும் நோக்கத்தில் விமானம் தொடர்ந்து தாமதம் செய்யப்படுவதாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் குனால் கோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“தில்லிக்குச் செல்ல வேண்டிய விமானம் மாலை 3 மணிக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த விமானம் மாலை 3.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 4.30 மணிக்குச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இன்னும் எத்தனை முறை அந்த விமானம் தாமதமாகும் எனக் கூறமுடியாது. தில்லி செல்லும் சகோதரி (மமதா) பங்கேற்கத் திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளைச் சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்தத் தாமதங்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவையா எனும் எண்ணம் தோன்றுகிறது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, தில்லியின் ராஜ பாதையில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Trinamool Congress has alleged that the flight is being repeatedly delayed specifically to prevent Mamata Banerjee from travelling to Delhi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.