ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜி
ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பையும் காக்கும் வகையில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என மமதா பேசியது குறித்து...
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் நாடு முழுவதும் போராட்டங்கள் வலுக்கும் என மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி இன்று (செப். 30) எச்சரித்தார்.
தில்லியில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மமதா பானர்ஜி, ஒமர் அப்துல்லா, சுப்ரியா சூலே, திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முந்தைய வாக்காளர் பட்டியலை, இனிவரும் அனைத்துத் தேர்தல்களிலும் பயன்படுத்த வேண்டும் எனவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
Advertisement
Advertisement
இக்கூட்டத்தில் செய்தியாளர்களுடன் மமதா பானர்ஜி பேசியதாவது:
''ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால், நாங்கள் மண்ணிலிருந்து வானம் வரை ஒரு மாபெரும் இயக்கத்தைத் தொடங்குவோம். ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பையும் காக்கும் வகையில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நாங்கள் போராடுவோம்; வெற்றி பெறுவோம்'' எனக் குறிப்பிட்டார்.
மமதா பானர்ஜியின் இந்த விடியோவைப் பகிர்ந்து காங்கிரஸ் கட்சி பதிவிட்டுள்ளதாவது:
''அச்சமற்ற, துணிச்சலான தலைவர்கள் வெறும் சண்டையிடுவதோடு நின்றுவிடுவதில்லை; தங்களோடு இணைந்து போராடுபவர்களையும் அவர்கள் பாராட்டுகிறார்கள்'' என காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவரான சுப்ரியா ஸ்ரீனேட் மமதாவின் விடியோவைப்பகிர்ந்துள்ளார்.
மேலும், தவறுகளுக்கு எதிரான மமதாவின் துணிச்சலை சோனியா காந்தி வெகுவாகப் பாராட்டியதாகவும் பதிவிட்டுள்ளார்.
Protests will intensify if Gyanesh Kumar does not step down: Mamata Banerjee
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.