FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தேசியக் கொடி அசைப்பது குற்றமல்ல என்பதைக் காட்டுங்கள்! - சிஜேபி அறிவுறுத்தல்!

சிஜேபி தலைமையிலான தேசிய கொடி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில்...

16 அக்டோபர் 2026, 6:17 pm IST
சிஜேபி போராட்டம்... - கோப்புப் படம்
பகிர்:

தில்லியில், தேசியக் கொடி பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், போராட விரும்பும் மக்களுக்கு கரப்பான்பூச்சி மக்கள் கட்சி புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முயன்ற சிஜேபி நிர்வாகிகள் அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தில்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியிலுள்ள சென்ட்ரல் பூங்காவில் இன்று (அக். 16) மாலை 5 மணிக்கு மூவர்ண தேசியக் கொடி பேரணி நடத்தவுள்ளதாக, சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

ஆனால், பேரணி நடைபெறுவதற்கு முன்னதாகவே அபிஜீத் தீப்கே, அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா உள்ளிட்டோர் தில்லி காவல் துறையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தேசிய கொடி பேரணியில் பங்கேற்கத் தயாரான மக்களுக்கு சிஜேபி புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

இதுபற்றி, சிஜேபி வெளியிட்டுள்ள பதிவில்,

மூவர்ணக் கொடியை அசைப்பது குற்றமல்ல,

1. கன்னாட் பிளேஸுக்கு 5 பேருக்கும் குறைவான குழுக்களில் செல்லுங்கள்.

2. கன்னாட் பிளேஸில் தேசியக் கொடியை ஏந்தி, நீங்கள் கொடியுடன் இருக்கும்படியான புகைப்படங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

3. கன்னாட் பிளேஸில் இருந்து புறப்பட்டு மூவர்ணக் கொடியை அசைப்பது குற்றமல்ல என்பதை நாட்டுக்குக் காட்டுங்கள்.

எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கன்னாட் பிளேஸில் சிஜேபி தலைமையிலான தேசியக் கொடி பேரணிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

In Delhi, with the police having denied permission for a national flag rally, the CJP has issued new instructions to those who wish to protest.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments