தேசியக் கொடி பேரணிக்கு அனுமதியில்லை! அபிஜீத் தீப்கேவுக்கு தில்லி போலீஸ் நோட்டீஸ்!
தேசியக் கொடி பேரணிக்கு அனுமதியில்லை என்று அபிஜீத் தீப்கேவுக்கு தில்லி போலீஸ் நோட்டீஸ்...
தில்லியில் தேசியக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த மாநகராட்சி அனுமதி அளிக்கவில்லை என்று சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கேவுக்கு காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி மற்றும் ஏராளாமான மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, போராட்டம் நடத்தக்கூடிய இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சிஜேபி நிர்வாகிகள் அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் நேற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement
இதனால், தேசியக் கொடியுடன் போராடிய சிஜேபியினர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கன்னாட் பிளேஸில் தேசியக் கொடியுடன் வரும் வெள்ளிக்கிழமை (அக். 16) போராட்டம் நடத்தவுள்ளதாக, சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தில்லியில் அபிஜீத் தீப்கே தங்கியிருந்த பகுதிக்கு நேரில் சென்ற காவல்துறை அதிகாரிகள், அனுமதி அளிக்கப்படாததால் போராட்டத்தில் பங்கேற்க கூடாது என்று நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
அந்த நோட்டீஸில், ”கன்னாட் பிளேஸில் சட்டப் பிரிவு 163 அமலில் இருப்பதாக், தேசியக் கொடி பேரணி நடத்துவதற்கு புதுதில்லி மாநகராட்சி அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி கன்னாட் பிளேஸிற்குச் சென்றால், அது பிரிவு 163-ஐ மீறும் செயலாகக் கருதப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் போராட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
No permission for the national flag protest - Delhi Police issues notice to Abhijit Dipke
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.