FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தலைமை நீதிபதி சூர்யகாந்த் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த தேசிய சட்டப் பல்கலை. மாணவர்கள்!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை மாணவர்கள் புறக்கணித்ததைப் பற்றி...

18 அக்டோபர் 2026, 10:28 am IST
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பக்ரு, முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் பலர்.
பகிர்:

இந்திய தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை 105 மாணவர்கள் புறக்கணித்தது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்திய தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் 34-ஆவது பட்டமளிப்பு விழா கர்நாடகத்தின் பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த், கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விபு பக்ரூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினரான உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் பட்டத்தோ்வுகளில் சிறப்பிடங்களை பெற்றவர்களுக்கு பதக்கங்கள், சட்ட பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்தப் பட்டமளிப்பு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டமளிப்பு விழாவை 105 மாணவர்கள் புறக்கணித்தனர். இதனால், வெறும் 17 மாணவர்களுக்கு மட்டும் பட்டம் வழங்கி நீதிபதி சூர்யகாந்த் கௌரவித்தார்.

முன்னதாக, தலைமை நீதிபதி சூர்ய காந்த், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2026-ஆம் ஆண்டு மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்தப் பட்டமளிப்பு விழா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. அதன்பின் தற்போது நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் நடத்தப்பட்டதால், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தனர். இந்த விவகாரம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நீட் வினாத்தாள் முறைகேட்டை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட விவகாரத்தில் விடியோ பார்த்து விசாரிக்க நேரமில்லை எனக் கூறி, வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, மே மாதத்தில் ஒரு வழக்கு விசாரணையின்போது, “வேலையில்லா இந்திய இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என்றும் விமர்சித்திருந்தார்.

இதன் எதிரொலியாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செயல்பட்டுவரும் சட்டப் படிப்பு மற்றும் ஆய்வுக்கான தேசிய அகாடமி பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்கான சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்தை அழைப்பதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

summary

A whopping 105 regular graduates from the the National Law School of India University (NLSIU) Bengaluru’s 2026 batch received their degrees in absentia on Saturday, compared to mere 17 at the 2025 convocation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments