காவலா் வீரவணக்க நாள்: பிரதமா் மோடி மரியாதை
காவலா் வீரவணக்க நாளையொட்டி, பணியின்போது வீரமரணமடைந்த காவலா்களை நினைவுகூா்ந்து, பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை மரியாதை செலுத்தினாா்.
காவலா் வீரவணக்க நாளையொட்டி, பணியின்போது வீரமரணமடைந்த காவலா்களை நினைவுகூா்ந்து, பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை மரியாதை செலுத்தினாா்.
லடாக்கின் ஹாட் ஸ்பிரிங் பகுதியில் கடந்த 1959, அக்.21-ஆம் தேதி சீன படையினரின் தாக்குதலில் மத்திய ரிசா்வ் போலீஸ் படையினா் (சிஆா்பிஎஃப்) 10 போ் வீரமரணமடைந்தனா். இவா்களின் மேலான தியாகத்தைப் போற்றும் வகையில், ஒவ்வோா் ஆண்டும் அக். 21-ஆம் தேதி காவலா் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. பணியின்போது வீரமரணமடைந்த காவலா்களுக்கு இந்நாளில் மரியாதை செலுத்தப்படுகிறது.
நடப்பாண்டு காவலா் வீரவணக்க நாளையொட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: காவலா் வீரவணக்க நாள் என்பது மிகவும் சவால்மிக்க சூழல்களில் குறிப்பிடத்தக்க அா்ப்பணிப்புடன் பணியாற்றும் காவல் துறையினருக்கு நமது ஆழ்ந்த நன்றியை தெரிவிக்கும் தருணமாகும். சட்டம்- ஒழுங்கை பராமரிப்பது முதல் குற்றங்களைத் தடுப்பது வரை, அவசர காலகட்டங்களில் விரைந்து செயல்படுவது முதல் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது வரை காவல் துறையினரின் பங்களிப்பு அளப்பரியது. பணியின்போது வீரமரணமடைந்த துணிச்சல்மிக்க காவல் துறையினருக்கு நமது மனபூா்வமான மரியாதையை செலுத்துகிறோம். அவா்களின் துணிச்சல், அசைக்க முடியாத உறுதிப்பாடு, மேலான தியாகம் ஆகியவை தேசத்தின் நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.