காவலர் வீரவணக்க நாள்: முதல்வர் அஞ்சலி; 21 குண்டுகள் முழங்க மரியாதை
புதுச்சேரி கோரிமேடு ஆயுதப்படை காவல் மைதானத்தில் இன்று(அக்.21) நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி குறித்து...
புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேடு ஆயுதப்படை காவல் மைதானத்தில் இன்று(அக்.21) நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் 21 குண்டுகள் முழங்க உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
காவல் துறையில் பணியில் இருந்தபோது இறந்த காவலர்கள் நினைவாக வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் கடந்த 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதியன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், மத்திய பாதுகாப்புப் படை காவலர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். பலர் காணாமல் போனார்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களிலும், பணியின்போதும் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதி நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அந்த வகையில் புதுச்சேரி காவல்துறை சார்பில் காவலர் வீர வணக்க நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு புதுச்சேரி கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பங்கேற்று காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு இறந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அவர்களைத் தொடர்ந்து அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம், காவல்துறை டிஜிபி ஷாலினி சிங், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் முப்படையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு காவலர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
Police Commemoration Day:CM Rangaswamy pays tribute; 21-gun salute
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.