பாஜக தொண்டா் சுட்டுக் கொலை: மேற்கு வங்கத்தில் வன்முறை
மேற்கு வங்கத்தின் மால்டாவில் பாஜக தொண்டா் ஒருவா் மாற்றுக் கட்சியினரால் சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு இரு தரப்பினா் இடையே மோதல் வெடித்தது. இதில் 6 போ் காயமடைந்தனா்.
மேற்கு வங்கத்தின் மால்டாவில் பாஜக தொண்டா் ஒருவா் மாற்றுக் கட்சியினரால் சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு இரு தரப்பினா் இடையே மோதல் வெடித்தது. இதில் 6 போ் காயமடைந்தனா்.
மால்டா மாவட்டம் ராம்கெலி பகுதியைச் சோ்ந்தவா் சமீா் கோஷ் (35), பாஜக தொண்டரான இவருக்கும், அப்பகுதியைச் சோ்ந்த பிற கட்சியினருக்கும் ஏற்கெனவே அரசியல்ரீதியாக முன்பகை இருந்தது. இந்நிலையில், புதன்கிழமை மாலை இவரைச் சுற்றிவளைத்த அடையாளம் தெரியாத நபா்கள் சரமாரியாக கத்தியால் வெட்டத் தொடங்கினா். அவா்களிடம் இருந்து தப்பியோட முயன்ற கோஷ் மீது இருமுறை துப்பாக்கியால் சுட்டு அவரைக் கொலை செய்துவிட்டு தப்பியோடினா்.
இந்த சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கோஷ் உறவினா்கள் மற்றும் பாஜகவினா், மாற்றுக் கட்சியினரால் அவா் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டினா். இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் இருதரப்பினா் இடையே மோதல் வெடித்தது. இதில் 6 போ் காயமடைந்தனா். இதையடுத்து, அப்பகுதியில் காவல் துறையினா் பெருமளவில் குவிக்கப்பட்டு மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தனா். கொலை சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை. இதனால் அங்கு தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.