தசரா திருவிழா! ஆந்திரத்தில் பாரம்பரிய கம்பு சண்டையில் ஒருவர் பலி; 100 பேர் காயம்!
ஆந்திரத்தில் பாரம்பரிய கம்பு சண்டையில் ஒருவர் பலியானது பற்றி...
ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீ மாலா மல்லேஸ்வர சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குச்சி சண்டையில் ஒருவர் பலியானார். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவரகட்டு கிராமத்தில் ஸ்ரீ மாலா மல்லேஸ்வர சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா நடைபெற்றது.
இந்த திருவிழாவின் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரிய சடங்கான குச்சி சண்டையிடும் பன்னி திருவிழா புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
Advertisement
Advertisement
ஸ்ரீ மாலா மல்லேஸ்வர சுவாமிக்கு திருமணம் நடத்தப்பட்டு, பல்லக்கில் ஊர்வலம் கொண்டு செல்லும் போது, 11 கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் சிலையைத் தன்வசப்படுத்த தடிகளாலும் தீப்பந்தங்களாலும் சண்டையிட்டுக் கொண்டனர்.
இந்த திருவிழாவில், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் தெலங்கானாவிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், பக்தர்கள் ஒருவரைஒருவர் தடிகளால் தாக்கிக் கொண்டதில் போதராஜு (28) என்ற இளைஞர் உயிரிழந்தார்.
மேலும், பன்னி திருவிழாவில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தலையில் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dussehra festival! One killed, 100 injured in traditional stick fight in Andhra Pradesh!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.