FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆந்திர முன்னாள் துணை முதல்வர் காலமானார்

ஆந்திர மாநில துணை முதல்வர் காளி கிருஷ்ண ஸ்ரீனிவாஸ் மறைவு குறித்து...

15 செப்டம்பர் 2026, 9:53 pm IST
காளி கிருஷ்ண ஸ்ரீனிவாஸ் - ஏஎன்ஐ
பகிர்:

ஆந்திர மாநில முன்னாள் துணை முதல்வர் காளி கிருஷ்ண ஸ்ரீனிவாஸ் என்னும் அல்லா நானி மாரடைப்பு காரணமாக இன்று (செப். 15) காலமானார். அவருக்கு வயது 57.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வீட்டில் வசித்துவந்த நிலையில், இன்று மாரடைபு காரணமாக அல்லா நானி உயிரிழந்தார்.

காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய இவர், 2004 மற்றும் 2009 ஆண்டு தேர்தலில் ஏலூரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Advertisement

Advertisement

பிறகு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். எனினும் இதில் தோல்வி அடைந்தார்.

மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற இவர், 2022 வரை முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் துணை முதல்வராகப் பொறுப்பு வகித்தார். இதுமட்டுமின்றி சுகாதாரத் துறை அமைச்சராகவும் இருந்தார்.

கடந்த ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகி, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

summary

Former Andhra Pradesh Deputy Chief Minister Kali Krishna Srinivas

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments