FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் சாதி கேட்கப்படாது! ஹிமாச்சல் முதல்வர் அறிவிப்பு!

ஹிமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி சேர்க்கை விண்ணப்பங்களில் சாதிகளுக்கான பகுதி நீக்கப்படும் என அறிவிப்பு...

ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு... - எக்ஸ்
பகிர்:

ஹிமாச்சலப் பிரதேசத்தில், அடுத்த கல்வியாண்டில் பள்ளிச் சேர்க்கை விண்ணப்பப் படிவங்களில் சாதிகள் கேட்கப்படாது என மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் இன்று (ஆக. 26) நடைபெற்ற பட்டியல் சமூக நல வாரியத்தின் கூட்டத்தை அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையேற்று நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் சுகு, சாதி ரீதியான பாகுபாட்டை ஒழிப்பதில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மாநில அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஒழிக்கும் நடவடிக்கையாக பள்ளிச் சேர்க்கை விண்ணப்பப் படிவங்களில் சாதி விவரம் குறித்து கேட்கப்படும் பகுதியானது அடுத்த கல்வியாண்டு (2027-28) முதல் நீக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இருப்பினும், அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்காகப் பட்டியல் சமூகத்தினர் தங்களின் சாதி விவரங்களைத் தொடர்ந்து வழங்குவார்கள் எனவும், அரசின் நலத் திட்டங்களை அவர்கள் சிரமமின்றிப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

summary

Himachal CM Sukhu has announced that caste details will not be sought in school admission application forms for the upcoming academic year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments