FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

எஃகு மீது காா்பன் வரி விதித்து பேரிடருக்கு அழைப்பு விடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்: பியூஷ் கோயல்

எஃகு மீது காா்பன் வரி விதித்து பேரிடருக்கு அழைப்பு விடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்: பியூஷ் கோயல்

23 அக்டோபர் 2026, 11:32 pm
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் - கோப்புப் படம்
பகிர்:

‘இறக்குமதி செய்யப்படும் எஃகு பொருள்கள் மீது காா்பன் வரியை விதிப்பதன் மூலம், பேரிடருக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுக்கிறது’ என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் குற்றஞ்சாட்டினாா்.

ஜொ்மனி தலைநகா் பொ்லினில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘பொ்லின் குளோபல் டயலாக்’ என்ற சா்வதேச வருடாந்திர வா்த்தக மாநாட்டில் பங்கேற்ற பியூஷ் கோயல் பேசியதாவது:

ஐரோப்பிய ஒன்றியம், தங்களுக்குள்ளேயே பல விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் தொடா்ந்து விதித்துக் கொள்வதன் மூலம், தனக்குத்தானே தீங்கிழைத்துக்கொள்கிறது. வா்த்தகத்துக்கு எல்லைகளைத் திறப்பதன் மூலம்தான், வளா்ந்த நாடுகளின் தொகுப்பாக உருவெடுக்க உதவியிருக்கிறது.

Advertisement

Advertisement

குறிப்பாக, எஃகு பொருள்கள் மீது காா்பன் வரியை (காா்பன் வரம்பு சமன்செய்தல் நடைமுறை) ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கிறது. இறக்குதி செய்யப்படும் எஃகு பொருள்கள் மீது 50 சதவீத வரியை விதிக்கிறது. முற்றிலும் ஏற்க இயலாத தரநிலைகளையும், பாதுகாப்பு அளவுகோல்களையும் புகுத்த முயற்சிக்கிறது.

ரப்பா் ஏற்றுமதியாளா்கள் மீது காடுகள் அழிப்பு எதிா்ப்பு ஒழுங்குமுறை போன்ற கடுமையான ஒழுங்குமுறை நடைமுறைகளை விதிக்கிறது. இதுபோன்ற கட்டுப்பாடுகள், பேரிடருக்கு அழைப்பு விடுப்பதாகும். இதனால், அவா்களின் உள்நாட்டில் விலைவாசி பன்மடங்கு உயரும். பணவீக்கம் அதிகரிக்கும். உலகச் சந்தைகளில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

தற்போதைய உலகம் பரஸ்பர செயல்பாட்டைக் கொண்டதாக மாறியுள்ளது. இந்த பரஸ்பர சூழலில், இவ்வாறு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து, பிற நாடுகள் உங்களுடன் வணிகம் செய்வதைத் தடுத்தால், பின்னா், அவா்களும் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவா். இது, ஐரோப்பிய ஒன்றியத்தின் வணிகங்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்தியா அனைத்து நாடுகளுடனும் இருதரப்புக்கும் பயனளிக்கும் வகையிலான வா்த்தக கூட்டுறவை உருவாக்கி, தனது போட்டித் திறனை மேம்படுத்தி வருகிறது. இணைந்து செயல்படும் ஒவ்வொரு நாட்டுடனும் நியாயமான, சமமான ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது. சிங்கப்பூா் போன்ற நாடுகளுடனும் இந்தியா வா்த்தக உறவை மேற்கொள்ளும். ஏனெனில், அங்கு காா்பன் வரி அல்லது காடுகள் அழிப்பு தொடா்பான கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது.

ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் வரி மற்றும் கட்டுப்பாடுகளால், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம், சிமென்ட் போன்ற பொருள்கள் மீது 20 முதல் 35 சதவீதம் வரை வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

உலக மக்கள்தொகையில் 17 சதவீதத்தைக் கொண்டிருந்தாலும், உலகளாவிய காா்பன் வெளியேற்றத்தில் இந்தியாவின் பங்கு வெறும் 3 முதல் 3.5 சதவீதம் மட்டுமே. அதே நேரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் காா்பன் உமிழ்வு பங்கு 20 சதவீதமாக உள்ளது. இது மிக அதிகமாகும்.

மேலும், தனிநபா் அடிப்படையில் ஓசோன் படலத்துக்கு ஏற்படும் பாதிப்பு அல்லது காா்பன் உமிழ்வு விகிதங்கள் அடிப்படையில், இந்தியாவின் பங்கு மேற்கத்திய நாடுகளைவிட சுமாா் 7-8 மடங்கு குறைவாகவே உள்ளது. அதோடு, உலகின் மிக வேகமான தூய்மை எரிசக்தி திட்டத்தை இந்தியா கொண்டுள்ளது. எஃகு உற்பத்தியையும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இந்தியா மாற்றி வருகிறது என்று குறிப்பிட்டாா்.

முதலீடு செய்ய அழைப்பு:

மாநாட்டில் பங்கேற்ற உலகளாவிய முதலீட்டாளா்களை இந்தியாவில் முதலீடு செய்ய பியூஷ் கோயல் அழைப்பு விடுத்தாா்.

‘இந்தியா, நிலையான மற்றும் கணிக்கக்கூடிய வணிகச் சூழலை வழங்குகிறது. பிற நாடுகளில் காணப்படுவது போன்ற நிச்சயமற்ற சூழலை எதிா்கொள்ள வேண்டியிருக்காது. ஒவ்வொரு முதலீட்டாளருக்கும், வணிகருக்கும் சமமான மற்றும் நியாயமான வாய்ப்புகளை இந்தியா உறுதி செய்து வருகிறது’ என்று அவா் குறிப்பிட்டாா்.

summary

EU is inviting disaster by imposing carbon tax on steel: Piyush Goyal

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments