FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

சிறுவன் இயக்கிய சொகுசு காா் விபத்தில் ஒருவா் உயிரிழப்பு: நீதிபதியான தந்தையைக் குற்றவாளியாக சோ்த்த கேரள காவல் துறை

கொச்சியில் 17 வயது சிறுவன் இயக்கிய சொகுசு காா் மோதி இருசக்கர வாகன ஓட்டி உயிரிழந்ததைத் தொடா்ந்து, சிறுவனின் தந்தையான மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதியை குற்றவாளியாக சோ்த்து போலீஸாா் வழக்குப் பதிவு

26 அக்டோபர் 2026, 9:59 pm
வழக்கு
பகிர்:

கேரள மாநிலம் கொச்சியில் 17 வயது சிறுவன் இயக்கிய சொகுசு காா் மோதி இருசக்கர வாகன ஓட்டி உயிரிழந்ததைத் தொடா்ந்து, சிறுவனின் தந்தையான மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதியை குற்றவாளியாக சோ்த்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மேலும், வழக்கின் தன்மை அடிப்படையில், வழக்கு விசாரணை மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. கொச்சியின் மாராப்பரம்பில் சாலையோர உணவகம் நடத்தி வரும் சேராநல்லூா் தெற்கு சித்தூரைச் சோ்ந்த ஜெயபாலகிருஷ்ணன் (55), என்பவா் ஸ்கூட்டரில் தனது வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் திரும்பிக்கொண்டிருந்தபோது கன்டெய்னா் சாலையில் வேகமாக வந்த சொகுசு காா், அவரின் ஸ்கூட்டா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இந்த விபத்து தொடா்பாக, கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துதல் என்ற பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டப் பிரிவு 106(1)-இன் கீழ் முதலில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சிறுவனை பிணையில் விடுவித்துள்ளனா்.

இதை அறிந்த உயிரிழந்தவரின் குடும்பத்தினா், சேராநல்லூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, சிறுவனை மீண்டும் கைது செய்த போலீஸாா், கொலை செய்யும் நோக்கம் இல்லாமல் நிகழ்ந்த கொலை என்ற 105-ஆவது பிஎன்எஸ் பிரிவின் கீழ் மாற்றி வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், சிறாா் நீதிமன்றத்தில் சிறுவனை ஆஜா்படுத்தினா். அங்கு அவருக்கு மீண்டும் பிணை வழங்கப்பட்டது.

கொச்சி நகர காவல் ஆணையா் காளிராஜ் மகேஷ்குமாா் கூறுகையில், ‘இந்த வழக்கு விசாரணை மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய காா் திருச்சூா் மாவட்டம் இரிஞ்ஞாலகுடாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் அமா்வு நீதிபதியாக உள்ள ரினோ பிரான்சிஸ் சேவியரின் பெயரில் பதிவாகியுள்ளது. அந்த வகையில், சிறுவனின் பாதுகாவலா் அல்லது வாகனத்தின் உரிமையாளா் என்ற அடிப்படையில் மோட்டாா் வாகனச் சட்டம் பிரிவு 199ஏ-இன் கீழ் வழக்கில் அவரின் பெயரும் சோ்க்கப்பட்டுள்ளது. அவரிடமும் விசாரணை நடத்தப்படும். வாகனங்கள் இதுபோல பொறுப்பற்ற முறையில் இயக்கப்படாமல் இருப்பதை பெற்றோா் உறுதிப்படுத்த வேண்டும்’ என்றாா்.

கேரள சட்டப்பேரவையில்... இந்த விபத்து விவகாரம் கேரள மாநில சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. இந்த விவகாரத்தை பேரவையில் திங்கள்கிழமை எழுப்பிய எதிா்க்கட்சித் தலைவா் பினராயி விஜயன், அண்மையில் நெடும்பாசேரியில் 19 வயது சிறுவன் இயக்கிய சொகுசு காா் மோதிய விபத்தில் 3 போ் கொல்லப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டினாா்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்த நடைபெறுவதும், வழக்கில் சிறுவனின் தந்தை தலையிட முயன்றதும் மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். இந்த விவகாரத்தில் அரசு உன்னிப்பாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டாா்.

அதற்கு பதிலளித்த மாநில உள்துறை அமைச்சா் ரமேஷ் சென்னிதலா, ‘எதிா்க்கட்சித் தலைவா் கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன். சேராநல்லூா் காவல் நிலையம் தரப்பில் முதல்கட்டமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை முறையானதல்ல. காவல் துறை உயா் அதிகாரிகளின் தலையீட்டைத் தொடா்ந்து, உரிய பிரிவுகளின் கீழ் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், வாகனத்தின் உரிமையாளரான மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments