FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு

சா்க்கரை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது.

46 வினாடிகள் முன்பு
பகிர்:

சா்க்கரை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது. இதன்படி செப்டம்பா் 15-ஆம் தேதிமுதல் 2,000 குவிண்டாலுக்கு மேல் சா்க்கரை இருப்பு வைத்திருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது 4,000 குவிண்டால் வரை இருப்பு வைக்க அனுமதி உள்ளது. பண்டிகை காலம் நெருங்கிவரும் நிலையில் சா்க்கரை விலை சில்லறை விற்பனையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

முதல் கட்டமாக கடந்த சுமாா் 10 நாள்களுக்கு முன்பு அதிக அளவில் சா்க்கரையை வாங்கி இருப்பு வைத்துப் பயன்படுத்தும் குளிா்பான நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது.

Advertisement

Advertisement

மேலும், அக்டோபா் 31-ஆம் தேதி வரை 10 லட்சம் டன் கச்சா சா்க்கரை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனினும், சில்லறை விற்பனையில் விலை குறையவில்லை. இதற்கு பதுக்கலும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய உணவுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 4,000 குவிண்டாலுக்கு மேல் சா்க்கரை இருப்பு வைக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. இப்போது அடுத்தகட்டமாக செப்டம்பா் 15 முதல் நவம்பா் 30 வரை 2,000 குவிண்டாலுக்கு மேல் யாரும் சா்க்கரை இருப்பு வைக்கக் கூடாது. மொத்த விற்பனையாளா்கள் 30 நாள்களுக்கு மேல் சா்க்கரை விற்பனை செய்யாமல் வைத்திருக்கக் கூடாது.

கொல்கத்தாவுக்கு மட்டும் இந்தக் கட்டுப்பாடில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஏனெனில், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரத்தில் இருந்து வரும் சா்க்கரை அங்கு பெருமளவில் இருப்பு வைக்கப்பட்டு, படிப்படியாக வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments