FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழக விவசாய மேம்பாட்டுக்கு ரூ.355 கோடி விடுவிப்பு: மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் ஒப்புதல்

தமிழ்நாடு உள்பட ஐந்து மாநிலங்களுக்கு இரண்டாம் தவணையாக ரூ.1,183.11 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் ஒப்புதல் அளித்துள்ளார்.

2 செப்டம்பர் 2026, 4:55 am IST
பகிர்:

நமது சிறப்பு நிருபர்

மத்திய அரசின் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா (பிஎம்-ஆர்கேவிஒய்) மற்றும் கிருஷ்ணோன்னதி யோஜனா (கேஒய்) ஆகிய இரண்டு முக்கிய வேளாண் திட்டங்களின் கீழ், தமிழ்நாடு உள்பட ஐந்து மாநிலங்களுக்கு இரண்டாம் தவணையாக ரூ.1,183.11 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.355.88 கோடி இரண்டாம் தவணையாக விடுவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

மாநில வேளாண் அமைச்சர்கள் மற்றும் மாநில துறைச் செயலர்களுடனான ஆலோசனை கூட்டம் தில்லியில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலாக நடைபெற்றது.

மத்திய வேளாண் துறைச் செயலர் ஆதிஷ் சந்திரா மற்றும் உயரதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தமிழகத்தைத் தொடர்ந்து, ஆந்திரத்துக்கு ரூ.409.40 கோடி, ஒடிஸôவுக்கு ரூ.219.65 கோடி விடுவிக்கப்படுகிறது. உத்தரகண்ட் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு முறையே ரூ.106.67 கோடி மற்றும் ரூ. 91.51 கோடி விடுவிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியைக் கொண்டு "சொட்டு நீர் பாசனம் மூலம் அதிக மகசூல்' என்ற திட்டத்தைச் செயல்படுத்தி, நீர் வளத்தைப் பாதுகாப்பதோடு பயிர் விளைச்சலைப் பெருக்குதல், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நவீன வேளாண் கருவிகள் வாங்க மானியம் வழங்குதல், விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைத்து, வருவாயை உயர்த்த உதவுதல் போன்றவை தொடர்புடைய ஐந்து மாநிலங்களில் சாத்தியமாகும் என்று கூட்டத்தில் மத்திய அமைச்சர் குறிப்பிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

"பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா' என்பது விவசாயத் துறையை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கிய நிதியுதவி திட்டமாகும்.

"கிருஷ்ணோன்னதி யோஜனா' 2016-17 ஆம் ஆண்டு முதல் பல்வேறு முக்கிய திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோல, பின்தங்கிய மாவட்டங்களில் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க மத்திய அரசு கொண்டுவந்துள்ள "பிரதமர் தன-தானிய கிருஷி யோஜனா' என்ற திட்டத்தை அமல்படுத்த தேர்வு செய்யப்பட்ட 100 மாவட்டங்களில் அதை விரைவுபடுத்துவது குறித்தும் அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கலந்துரையாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments