FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அன்னா ஹசாரேவின் உடல்நிலை எப்படி உள்ளது? உதவியாளர் வெளியிட்ட தகவல்!

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் உடல்நிலை பற்றி...

37 வினாடிகள் முன்பு
அன்னா ஹசாரே - X
பகிர்:

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், தற்போது அவர் சீராக இருப்பதாகவும் அவரது நெருங்கிய உதவியாளர் தெரிவித்தார்.

87 வயதான அன்னா ஹசாரே உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் திங்களன்று அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குக் கடுமையான வைரஸ் தொற்று. நீரிழப்பு, சிறுநீரக செயல்பாட்டுப் பரிசோதனைகள் தொடர்பாக மேம்பட்ட சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிசோதனையில் சிறுநீரகத் தொற்று இருப்பதாகவும், சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை நீராக உள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, அன்னா முறையான உணவை உட்கொண்டு வருவதாக அவரது உதவியாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான ஆதரவாளர்கள், சமூக ஆர்வலர்கள் இவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். மேலும், அவர் விரைவில் குணமடைய ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

மும்பை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஹசாரேவைச் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.

முன்னாள் ராணுவ வீரரும் சமூக ஆர்வலருமான இவர், பத்ம பூஷன் விருது பெற்றவர். கிராமப்புற மேம்பாடு, அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்காகப் பல ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களுக்கு இவர் தலைமை தாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The health condition of social activist Anna Hazare, admitted to a hospital in Mumbai, has improved, and he is now taking proper meals on the doctor's advice, his close associate said on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments