அண்ணா பல்கலை. முறைகேடு: வழக்கு தொடர்ந்த இணைப் பேராசிரியரின் பணியிடை நீக்கத்துக்கு இடைக்காலத் தடை!
அண்ணா பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக டீனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த இணைப் பேராசிரியர் சஸ்பெண்ட்க்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...
அண்ணா பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக டீனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த இணைப் பேராசிரியர் பணியிடை நீக்கத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கோவை அண்ணா பல்கலைக்கழக இணைப் பேராசிரியராக பணியாற்றி வரும் டாக்டர் ஜெ. வெங்கடேஷ், தான் சமர்ப்பித்த பணி அனுபவச் சான்றிதழ்கள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட குற்ற குறிப்பாணையையும் (மெமோ), இடைநீக்கத்தையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி மும்மினேனி சுதீர் குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா, “மனுதாரரின் பணி அனுபவச் சான்றிதழ்கள் 2008 ஆம் ஆண்டிலேயே பல்கலைக்கழகத்தால் சரிபார்க்கப்பட்ட பின்னரே நியமன ஆணை வழங்கப்பட்டதாகவும், அதன் பின்னரும் பல்வேறு கட்டங்களில், அவரது பணிப்பதிவுகள் சரிபார்க்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
பல்கலைக்கழகத்தின் முறைகேடுகள் தொடர்பாக பல்கலைக்கழக டீன் டாக்டர் எம். சரவணகுமாருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது சில ஆவணங்களை மட்டும் தேர்ந்தெடுத்து உள்நோக்கத்துடன் சரிபார்ப்புக்கு அனுப்பி, அதனடிப்படையில் குற்ற குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, குற்ற குறிப்பாணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும், இடைநீக்கத்துக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
The Madras High Court on Friday issued an order granting an interim stay on the suspension of an Associate Professor who had filed a case against a Dean regarding irregularities at Anna University.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.