சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப்.7) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை(செப்.2) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப்.7) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சி. விஜயபாஸ்கர் ரூ.5 கோடி பெற்றதாக அதிமுக வேட்பாளர் தனவிமல் தொடர்ந்த வழக்கு, வைகோ தொடர்ந்த வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப். 7) விசாரணைக்கு வருகின்றன.
1. எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
Advertisement
Advertisement
2. கோயில் திருவிழாக்களில் யானைகளைப் பயன்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கும் விசாரிக்கப்பட உள்ளது.
3. தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதித்து டிஜிபி பிறப்பித்த சுற்றறிக்கக்கு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையும் இன்று நடைபெறுகிறது.
4. 2019-ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட 1 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக வைகோ தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை செய்யப்பட உள்ளது.
5. சி. விஜயபாஸ்கர் ரூ.5 கோடி பெற்றதாக அதிமுக வேட்பாளர் தனவிமல் தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.