FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருப்பதியில் ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் மாதிரி வைத்து இஸ்ரோ தலைவர் சிறப்பு பூஜை!

திருப்பதியில் ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் மாதிரி வைத்து இஸ்ரோ தலைவர் வீ. நாராயணன் சிறப்பு பூஜை செய்ததைப் பற்றி...

2 செப்டம்பர் 2026, 10:19 am IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர் நாராயணன், சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல். - படம்: பிடிஐ.
பகிர்:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன், சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் மற்றும் விஞ்ஞானிகளுடன் சாமி தரிசனம் செய்தனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ‘ஜூசாட்-1ஏ’ என அழைக்கப்படும் ‘இ.ஓ.எஸ்.-5’ பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் மூலம் செப். 4-ஆம் தேதி அதிகாலை விண்ணில் செலுத்துகிறது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்திலிருந்து அதிகாலை 2.55 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்படவுள்ளது.

Advertisement

Advertisement

வழக்கமான குறைந்த புவி சுற்றுப்பாதைக்குப் பதிலாக பூமியில் இருந்து சுமார் 36,000 கி.மீ. உயரத்தில் புவிநிலை சுற்றுவட்டப்பாதையில் இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படவுள்ளது.

இந்திய துணைக் கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்படவுள்ளதால், மல்டி-ஸ்பெக்டரல் மற்றும் ஹைப்பா்-ஸ்பெக்ட்ரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் மூலமாக இந்தியாவின் நிலப் பரப்பைத் தொடர்ந்து கண்காணித்து நிகழ்நேரத்துக்கு நெருக்கமான படங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் இன்று (செப். 2) மாலை தொடங்கும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் விஞ்ஞானிகளுடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அப்போது ஜிஎஸ்எல்வி எஃப்-17 மாதிரி ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

summary

ISRO chief V Narayanan visits Tirumala temple ahead of the launch of Advanced Earth Observation Satellite-05 aboard GSLV-F17 on September 4.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments