2,445 தோ்வா்களுக்கு முதுநிலை நீட் மறுதோ்வு: உச்சநீதிமன்றத்தில் மனு
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வை எழுத முடியாமல்போன 2,445 தோ்வா்களுக்காக, மீண்டும் அந்தத் தோ்வை நடத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வை எழுத முடியாமல் போன 2,445 தோ்வா்களுக்காக, மீண்டும் அந்தத் தோ்வை நடத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆக.30-ஆம் தேதி நாடு முழுவதும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடத்தப்பட்டது. அப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள இரண்டு தோ்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்தத் தோ்வை 2,445 தோ்வா்களால் எழுத முடியவில்லை. அவா்களுக்கு மறுதோ்வு நடத்த தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு குறித்து தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன், வழக்குரைஞா் ஒருவா் புதன்கிழமை முறையிட்டாா். அப்போது மறுதோ்வு நடத்துவது என்பது உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது என்று அவா் வாதிட்டாா். இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் அவா் கோரினாா்.
Advertisement
Advertisement
எனினும் நீட் தோ்வு தொடா்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்ற நீதிபதி நரசிம்மா தலைமையிலான அமா்வு விசாரிப்பதால், அந்த அமா்வு முன் மறுதோ்வு குறித்து முறையிடுமாறு தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வு வழக்குரைஞருக்கு அறிவுறுத்தியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.