ஜிஎஸ்எல்வி-எஃப் 17: இறுதிகட்ட பணியில் அதிகாரிகள் தீவிரம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ‘இஓஎஸ்-05’-ஐ சுமந்தபடி ‘ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட்’ வெள்ளிக்கிழமை (செப். 4) அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ‘இஓஎஸ்-05’-ஐ சுமந்தபடி ‘ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட்’ வெள்ளிக்கிழமை (செப். 4) அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதையொட்டி, ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் 2-ஆவது ஏவுதளத்தில் ராக்கெட் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஏவுதலுக்கான இறுதிகட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். ஏவுதலுக்கு முன்னதாக ராக்கெட்டின் பல்வேறு நிலைகள், எரிபொருள் நிரப்புதல், செயற்கைக்கோள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளிட்டவற்றை சரிபாா்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏவுதலுக்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ள நிலையில், திட்டமிட்டபடி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ‘இஓஎஸ்-05’ செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு, வானிலை, பேரிடா் மேலாண்மை, வேளாண்மை உள்ளிட்ட பணிகளுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.