வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் சர்ச்சை!
வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி...
வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் எதிர்காலமாகக் கருதப்பட்ட ராகவ் சத்தா, 2012- ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அங்கம் வகித்து வந்தார்.
பஞ்சாபைச் சேர்ந்த ராகவ் சத்தா, ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவாலின் நம்பிக்கைக்குரியவராக விளங்கி, கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராகவ் சத்தாவின் கருத்துகளால் இளம் தலைமுறையினரிடம் பிரபலமானார்.
Advertisement
Advertisement
சமீப காலமாக அரவிந்த் கேஜரிவாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து சத்தா, அவரை சந்திப்பதை தவிர்த்து வந்த நிலையில், ஆம் ஆத்மி எம்பிக்கள் ஹர்ஷ் மஹாஜன், குலாம் அலி, ஷம்பு ஷரன் படேல், மயங்க் குமார் நாயக், மஸ்தான் ராவ் யாதவ் பீதா, ஜெபி மாதர் ஹிஷாம். சுபாஷிஷ் குந்தியா, ருங்ரா நர்ஸாரி, சந்தோஷ் குமார் ஆகியோருடன் சேர்ந்து பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில், பஞ்சாபின் வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து ராகவ் சத்தாவின் பெயர் நீக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் ‘நிரந்தரமாக வேறு இடத்துக்கு மாறிவிட்டார்’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைநகர் தில்லி, ஒடிசா, மிசோரம், சிக்கிம், மணிப்பூர், உத்தரகண்ட், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஹரியாணா, சண்டீகர், தெலங்கானா, பஞ்சாப், கர்நாடகம், மேகாலயம், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், நாகாலாந்து, திரிபுரா, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டையூ மற்றும் டாமன் என மொத்தம் 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மூன்றாம் கட்ட எஸ்ஐஆர் பணி நடைபெற்றது.
இந்தத் திருத்தத்தில் பஞ்சாப் மாநில வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 9.7 சதவிகிதம் அதாவது 20.66 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதில், ராகவ் சத்தாவின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து பேசிய ராகவ் சத்தா, “பஞ்சாப் அரசு தன் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Raghav Chadha's name was deleted from Punjab's draft electoral rolls and marked 'permanently shifted'. The Rajya Sabha MP called it a political revenge by the AAP for joining BJP.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.