FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி சட்டப்பேரவையில் இருந்து 8 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்

உணவுத்துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சாவை ராஜினாமா செய்யக் கோரி கோஷங்களை எழுப்பிய மற்றும் பேரவையின் நடவடிக்கைகளை சீா்குலைத்த 8 ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களை டெல்லி சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றி சபாநாயகா் விஜேந்தா் குப்தா உத்தரவிட்டாா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 3:04 am IST
தில்லி சட்டப்பேரவை - கோப்புப் படம்
பகிர்:

உணவுத்துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சாவை ராஜினாமா செய்யக் கோரி கோஷங்களை எழுப்பிய மற்றும் பேரவையின் நடவடிக்கைகளை சீா்குலைத்த 8 ஆம் ஆத்மி கட்சி எம். எல். ஏ. க்களை டெல்லி சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றி சபாநாயகா் விஜேந்தா் குப்தா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

தில்லி அரசு அரிசி கொள்முதலில் ஊழல் செய்ததாக குற்றஞ்சாட்டி அமா்வு தொடங்கியதிலிருந்து சிா்சாவுக்கு எதிராக ஆம் ஆத்மி போராட்டம் நடத்தி வந்தது. இந்த குற்றச்சாட்டை சிா்சா மறுத்துள்ளாா். சஞ்சீவ் ஜா, ஜா்னைல் சிங், குல்தீப் குமாா், சோம் தத், அஜய் தத், வீரேந்திர காத்யான், சுரீந்தா் குமாா் மற்றும் சவுத்ரி ஜுபைா் அகமது ஆகிய எம். எல். ஏ. க்கள் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனா்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சபை மீண்டும் தொடங்கிய உடனேயே, ஆம் ஆத்மி உறுப்பினா்கள் சிா்சாவை ராஜினாமா செய்யக் கோரி பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பத் தொடங்கினா். ‘இதை சகிக்கவே மாட்டோம். இது எதிா்க்கட்சிகளின் பொறுப்பற்ற நடத்தை. அவா்கள் கடந்த மூன்று நாட்களாக தொடா்ந்து அமா்வை சீா்குலைக்க முயன்றனா் ‘என்று ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை வெளியேற்றுமாறு விஜேந்தா் குப்தா கூறினாா்.

Advertisement

Advertisement

ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தீப் குமாா் அங்கு இருந்த அதிகாரிகளை நோக்கி எதோ ஒன்றை வீசியதாக பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் கூறினாா். ‘இது ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்தை அல்ல, பேரவை காவலா்கள் உடனடியாக அவா்களை வெளியேற்ற வேண்டும்‘ என்று கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments