கோரக்பூர் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டெடுப்பு!
கோரக்பூர் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வாசகம் கண்பிடிக்கப்பட்டது பற்றி.....
கோரக்பூர் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வாசகம் கண்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை கோரக்பூர் செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை வாசகம் கண்பிடிக்கப்பட்டது.
விமானத்தின் கழிப்பறையில் உள்ளே வைக்கப்பட்டிருந்த திசுப் பேப்பரில் அந்த வாசகம் எழுதப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இதனைத்தொடர்ந்து, பயணிகள் அனைவரும் உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு மற்றும் மோப்ப நாய் படையினர் இணைந்து விமானத்தில் சோதனை நடத்தினர்.
இருப்பினும் அந்த விமானம் மீண்டும் எப்போது கோரக்பூருக்குப் புறப்பட அனுமதிக்கப்படும் என்பது குறித்து உடனடியாக தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
A note warning of a bomb was found on a Gorakhpur-bound plane at Kolkata airport on Friday evening, triggering a panic, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.