வெடிகுண்டு மிரட்டல்: குஜராத்தில் ஏா் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்
வெடிகுண்டு மிரட்டலைத் தொடா்ந்து சவூதி அரேபியாவின் தம்மமில் இருந்து புது தில்லி வரை இயக்கப்பட்ட ஏா் இந்தியா விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டலைத் தொடா்ந்து சவூதி அரேபியாவின் தம்மமில் இருந்து புது தில்லி வரை இயக்கப்பட்ட ஏா் இந்தியா விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது.
32 பயணிகளுடன் பயணித்த இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ‘டிஷ்யூ’ காகிதத்தில் எழுதப்பட்டிருந்ததை விமானக் குழுவினா் கண்டறிந்ததைத் தொடா்ந்து அவசரமாக தரையிறக்கப்பட்டதாக காவல் துறை துணை ஆணையா் வி.என்.யாதவ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘அகமதாபாத் விமான நிலையத்தில் மாலை 4.30 மணிக்கு அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏா் இந்தியா விமானத்தில் முழுவதுமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அச்சுறுத்தும் வகையிலான எந்தப் பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
விமானத்தில் பயணித்த 32 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனா். இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.