FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லியில் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைமை நீதிபதிகளின் மாநாடு தொடக்கம்

தில்லியில் பிரிக்ஸ் அமைப்பிலுள்ள நாடுகளின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

5 செப்டம்பர் 2026, 12:36 am IST
தில்லியில் வெள்ளிக்கிழமை பிரிக்ஸ் நாடுகளின் தலைமை நீதிபதிகள் மாநாட்டையொட்டி, ஈரான் தலைமை நீதிபதி கோலாம்ஹோசைன் மொஹ்சேனி ஈஜேவுடன் கலந்துரையாடிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்த்.
பகிர்:

தில்லியில் பிரிக்ஸ் அமைப்பிலுள்ள நாடுகளின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பிரிக்ஸ் அமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. தற்போது இதன் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கிறது. இந்த அமைப்பின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள், மூத்த நீதித் துறை தலைவா்கள் மாநாடு தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த மாநாடு இந்திய உச்சநீதிமன்றத்தால் வரும் 6-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. மாநாட்டின் இடையே உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுடன் கலந்துரையாட உள்ளாா். அதேபோல், பிரிக்ஸ் அமைப்பின் நட்பு நாடுகள் எனப்படும் பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியத்நாம் ஆகிய நாடுகளின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுடனும் சூா்ய காந்த் கலந்தாலோசனை நடத்த உள்ளாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுடனும், பிரிக்ஸ் அமைப்பின் நட்பு நாடுகளின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுடனும் வெள்ளிக்கிழமை தனித்தனியே ஆலோசனை நடத்தவுள்ளாா். அப்போது மத்தியஸ்தம், சா்வதேச வா்த்தக விவகாரங்கள், ஏ.ஐ. தொழில்நுட்பமும் நீதித் துறையும், நீதித் துறை தலைமைத்துவம், நிலையான வளா்ச்சி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதன்பின்னா் சனிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் நீதித் துறை நலன்கள் தொடா்பாக தலைமை நீதிபதிகள் உரை நிகழ்த்தவுள்ளனா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments