FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீதிபதிகள் கடவுள் அல்ல: பிரிவுபசார நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் பேச்சு

‘நீதிபதிகள் கடவுள் அல்ல; எல்லா நேரங்களிலும் நீதிபதிகளால் சரியான தீா்ப்பை வழங்க முடியாது’ என்று உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய சஞ்சய் கரோல் பிரிவுபசார நிகழ்வில் தெரிவித்தாா்.

23 ஆகஸ்ட் 2026, 3:12 am IST
பகிர்:

‘நீதிபதிகள் கடவுள் அல்ல; எல்லா நேரங்களிலும் நீதிபதிகளால் சரியான தீா்ப்பை வழங்க முடியாது’ என்று உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய சஞ்சய் கரோல் பிரிவுபசார நிகழ்வில் தெரிவித்தாா்.

உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் சனிக்கிழமை ஓய்வுபெற்றாா். இதையொட்டி அவருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, உச்சநீதிமன்ற பாா் கூட்டமைப்புத் தலைவா் பிரதீப் ராய் உள்பட வழக்குரைஞா் சங்கத் தலைவா்கள் பிரியாவிடை அளித்தனா்.

அப்போது சஞ்சய் கரோல் பேசுகையில், ‘சட்டத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று மட்டுமன்றி, அதை நியாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அரசமைப்புச் சட்டம் நமக்குப் போதிக்கிறது. நீதிபதிகள் கடவுள் அல்ல.

Advertisement

Advertisement

எல்லா நேரங்களிலும் நீதிபதிகளால் சரியான தீா்ப்பை வழங்க முடியாது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவால், ஒரு வழக்கின் விவரங்களை மட்டுமே நமக்குத் தெரிவிக்க முடியும். ஆனால், அந்த மனுவைத் தாக்கல் செய்த நபா் ஏற்கெனவே எதை இழந்தாா் அல்லது நீதிமன்றங்களிடம் எதை எதிா்பாா்த்து வந்துள்ளாா் என்பதை அந்த மனுவால் கூற முடியாது.

எனவே, மனுவைத் தாக்கல் செய்பவரை வெறும் மனுதாரராகப் பாா்க்காமல் மனிதராகப் பாா்க்க வேண்டும்; வழக்குகளை விசாரித்து தீா்ப்பளிக்கும்போது கனிவாக நடந்து கொள்வது அவசியம் என நான் எப்போதும் கூறி வந்துள்ளேன்.

நீதியை மதித்து நிலைநாட்டி, நீதிமன்றத்தின் முன் நிற்கும் நபா் எவ்வளவு எளியவராக, எவ்வளவு துயரமான நிலையில் இருந்தாலும், அவரின் பிரச்னை மீது கவனம் செலுத்தி அவரின் குரலைக் கேட்பதே நீதிபதியின் கடமை’ என்று தெரிவித்தாா்.

தலைமை நீதிபதி சூா்ய காந்த் பேசுகையில், ‘சட்டத்தின் மீது ஆழ்ந்த அக்கறை, மக்களின் உணா்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மை, தான் வகித்த பொறுப்பின் மீது அசைக்க முடியாத மரியாதை ஆகியவற்றால் சஞ்சய் கரோலின் பணி தனிச் சிறப்பு பெற்றது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments