FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பட்டமளிப்பு விழா விருந்தினராக உச்சநீதிமன்ற நீதிபதி! மாணவர்கள் எதிர்ப்பு! ஏன்?

பட்டமளிப்பு விழா சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற நீதிபதியை அழைத்ததற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து...

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 7:36 pm IST
உச்சநீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் - IANS
பகிர்:

சட்டப் படிப்பு மற்றும் ஆய்வுக்கான தேசிய அகாடமி பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்கான சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்தை அழைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நீட் வினாத்தாள் முறைகேட்டை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட விவகாரத்தில் விடியோ பார்த்து விசாரிக்க நேரமில்லை எனக் கூறி, வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.

இதன் எதிரொலியாக பட்டமளிப்பு விழாவுக்கு நீதிபதி சூர்யகாந்தை அழைக்க சட்டம் பயின்ற மாணவர்கள் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செயல்பட்டுவரும் சட்டப் படிப்பு மற்றும் ஆய்வுக்கான தேசிய அகாடமி பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்கான சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்தை அழைக்க நிர்வாகம் தரப்பில் முடிவெடுக்கப்பட்டது.

இன்னும் பட்டமளிப்பு விழா தேதி முடிவு செய்யப்படவில்லை என்றாலும், சிறப்பு விருந்தினர் மட்டும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த தகவல் பட்டம் பெறவுள்ள மாணவர்கள் மத்தியில் பரவியதைத் தொடர்ந்து, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நீட் எதிர்ப்பு போராட்டத்தில் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தொடர்பான வழக்கின்போது உச்சநீதிமன்ற நீதிபதி நடந்துகொண்ட விதத்திற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

பல்கலைக் கழக துணை வேந்தர், பதிவாளர், ஆசியர் குழு உறுப்பினர்கள் மற்றும் பல்கலை நிர்வாகத்திடம் சிறப்பு விருந்தினருக்கான முடிவை பரிசீலனை செய்யுமாறு மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேர்வு செய்யப்படும் சிறப்பு விருந்தினர், ஜனநாயக உரிமைகளுக்குட்பட்டு பல்கலைக் கழக அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் கருத்துத் தெரிவித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், வேலையில்லா இந்திய இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என்று விமர்சித்திருந்தார். இதன் எதிரொலியாகவே கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உருவானது. இதில் இளைஞர்கள், மாணவர்கள் பலர் தன்னெழுச்சியாக தங்களை இணைத்துக்கொண்டு உரிமைகளுக்காகக் குரல் எழுப்பினர்.

summary

NALSAR students object to CJI Surya Kant as convocation chief gues

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments