FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

பிரிக்ஸ் மாநாட்டையொட்டி செப்டம்பர் 11ஆம் தேதி தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி....

57 வினாடிகள் முன்பு
கோப்புப்படம்.
பகிர்:

பிரிக்ஸ் மாநாட்டையொட்டி செப்டம்பர் 11ஆம் தேதி தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் தில்லியில் வரும் 12, 13ஆம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி மாநாட்டுக்கு தேவையான ஏற்பாடுகளை தில்லி அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

பிரிக்ஸ் மாநாட்டையொட்டி செப்டம்பர் 11ஆம் தேதி தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, அரசு உதவிபெறும் மற்றும் உதவிபெறாத அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் உட்பட, கல்வி இயக்குநரகத்தின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கல்வி இயக்குநரகத்தின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களும் இந்த விடுமுறை பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் அமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

தற்போது இதன் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Schools in the national capital will remain closed on September 11 on account of the BRICS Summit, according to an official circular.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments