சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!
பிரதமர் மோடி தனது சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி வழங்குவதாக காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி வழங்குவதாக காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார்.
தில்லி பல்கலையின் ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரிக்கு பிரதமர் மோடி நேற்று சென்றிருந்தார். அங்கு மாணவர்களிடையே பேசிய அவர், அரசுக்கு எதிராகச் செயல்படுபவர்களை ‘அறிவார்ந்த நக்சல்கள்’ எனக் குறிப்பிட்டுப் பேசினார்.
இந்த நிலையில், மோடி பேசியதை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஸ்ரீ ராம் கல்லூரியில் மாணவர்களுடன் உரையாட நீங்கள் சென்றீர்கள். நாட்டின் இளைஞர்களிடம் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து உரையாடுவதற்கான வாய்ப்பாக அது அமைந்திருக்க வேண்டும். ஆனால், இளைஞர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, அதனை அரசியல் பிரசார உரையாக நீங்கள் மாற்றிவிட்டீர்கள்.
Advertisement
Advertisement
மோடிஜி செயல்படுவதன் பாணி இதுதான். ஜனநாயகத்தில் கேள்விகளை ஒடுக்குவதற்காக எதிர்க்கட்சிகளுக்கு ஆண்டுதோறும் ஒரு புதிய அடைமொழி சூட்டப்படுகிறது. இதன்மூலம், அவர்களது சொந்தத் தோல்விகள் மறைக்கப்படுகின்றன.
கோபக்கார அங்கிள், அறிவார்ந்த நக்சல், நகர்ப்புற நக்சல், கான் மார்க்கெட் கும்பல், போராட்டக்காரர், ஒட்டுண்ணி என அடைமொழிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கு என்றும் மாறுவதில்லை.
மோடி ஜி, நீங்கள் மக்களைச் சென்றடைய முடியாத நிலையில் இருக்கையில், உங்களுக்கு மக்களிடம் செல்லும் முயற்சிகள் தேவைப்படுகின்றன.
பிரதமர் தனது ரிப்போர்ட் கார்டை மக்களின்முன் முன்வைத்தார். நாட்டின் இளைஞர்களும் தங்கள்ளின் ரிப்போர்ட் கார்டுடன் தயாராக நிற்கிறார்கள்.
பிரதமரின் ரிப்போர்ட் கார்டில் வேலையின்மை, பல ஆண்டுகளாகத் தேங்கியுள்ள அரசுப் பணி நியமனங்கள், வினாத்தாள் கசிவால் அவதிப்படும் மாணவர்கள், நாளுக்கு நாள் விலை உயர்ந்துகொண்டே செல்லும் கல்வி, குறைந்து வரும் கல்வி உதவித்தொகை வாய்ப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி உரிமையின் மீது அதிகரிக்கும் அழுத்தங்கள் மட்டுமே இருக்கும்.
மாணவர்களின் குரலைக் கேளுங்கள். விஷயங்களை நேரடியாப பேசாமல் சுற்றி வளைத்துப் பேசுவதால் தீர்வுகள் கிடைக்காது” என்று பதிவிட்டுள்ளார்.
Congress leader Kharge has criticized Prime Minister Modi for assigning epithets to opposition parties in order to mask his own failures.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.