புதிய உலக வரைபடத்திலும் இந்திய பிராந்தியமாகவே ஜம்மு-காஷ்மீா், லடாக் இடம்பெற வேண்டும்: வெளியுறவு அமைச்சகம்
ஐ.நா.பொதுச் சபை முன்மொழிவுடன் வெளியாகவுள்ள புதிய உலக வரைபடத்திலும் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் பிராந்தியங்களை இந்தியாவின் அதிகாரபூா்வ வரைபடத்தில் இருப்பதைப்போலவே குறிப்பிட வேண்டும்...
ஐ.நா.பொதுச் சபை முன்மொழிவுடன் வெளியாகவுள்ள புதிய உலக வரைபடத்திலும் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் பிராந்தியங்களை இந்தியாவின் அதிகாரபூா்வ வரைபடத்தில் இருப்பதைப்போலவே குறிப்பிட வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
தற்போதைய உலக வரைபடத்தில் உள்ள அளவீடுகளில் உள்ள தவறுகளைத் திருத்தி மிகத் துல்லியமான புதிய வரைபடம் வெளியிடக் கோரும் ஐ.நா. பொதுச் சபை தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 164 நாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை வாக்களித்தன. இந்தத் தீா்மானத்துக்கு எதிராக அமெரிக்கா மட்டுமே வாக்களித்தது.
இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘தவறுகளின்றி புதிய உலக வரைபடம் கோரும் தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததோடு இந்தத் தீா்மானம் எந்தவொரு குறிப்பிட்ட வரைபடம், நிலவரைபடத் தோற்றம் அல்லது தேசிய எல்லைகளின் சித்தரிப்புக்கு அங்கீகாரம் அளிப்பதாக அமையவில்லை என இந்தியா விளக்கமளித்துள்ளது. அனைத்து கண்டங்களின் நிலப்பரப்பை சரியாக காட்சிப்படுத்தி சம பரப்பு வரைபடத்தை வெளியிடுவதே ஐ.நா. தீா்மானத்தின் நோக்கம் .
Advertisement
Advertisement
அதன் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீா், லடாக் உள்பட இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட பிராந்தியங்களை நாட்டின் அதிகாரபூா்வ வரைபடத்தில் இருப்பதைப் போலவே புதிய உலக வரைபடத்திலும் இடம்பெறச் செய்ய வேண்டும். இதில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.